search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரமத்திவேலூர் தொழிலாளி பலி"

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கந்தம்பாளையம் அருகே உள்ள சித்தம்பூண்டி புதூரை சேர்ந்தவர் ராசு( வயது 70). இவர் மரம் ஏறும் தொழிலாளி. இந்நிலையில் நேற்று சின்னம்பாளையம் பகுதியில் உள்ள தென்னை மரம் தோட்டத்தில் தேங்காய் பறிக்க வழக்கம் போல் வேலைக்கு சென்றார். மரத்தின் உச்சியில் இருக்கும் ராசு இருக்கும் போது எதிர்பாராத விதமாக இடுப்பில் கட்டியிருந்த கயிறு அறுந்து கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கந்தம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ராதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
    ×